Saturday, November 3, 2012

இந்தியா எப்பவும் தமிழனுக்கு துரோகி தான், டெசோ என்பதொல்லாம் சுயநலன்- ஊர்கிழவன்

வணக்கம்.. வணக்கம்... நீண்ட நாளைக்கு பின்னால இந்த கிழவன் உங்களிடம் வாறேன். கொஞ்ச நாளா உடம்பு சரியில்லையென்று உந்த தருமாஸ்சுபத்திரியில் படுத்திருந்து ஒருமாதிரி தப்பி வந்திட்டேன். அந்தக் கதையை பிறகொருநாள் நான் சொல்லுறேன் சரி.!
இண்டைக்கு நான் ஒரு செய்தியை இலங்கை நெற்ல பார்த்தனான்.. உந்த மு.க ஸ்ராலினும் உவன் பாலு இருக்கிறான் தானே ரி.ஆர் அவரும் ஜ.நாவில டெசோ தீர்மானங்களை கொண்டு போய் கையளிச்சிருக்கினமாம்.

அப்ப அந்த தீர்மானத்தைப் பெற்றுக்கொண்ட ஐ.நா சபை துணைப் பொதுச் செயலாளர் நீங்கள் தமிழர்கள் மீது நல்ல அக்கறை வைச்சிருக்கிறீங்கள் எண்டு சொன்னாராம் என்று தாங்களே பறை தட்டிக்கொண்டு திரியுறாங்கள்.

உந்த தி.மு.க(ள்வர்) யாரென்று உங்களுக்கு தெரியாது. வன்னியில நடந்த சண்டையில் ஆயிரமாயிரமாய் சனங்கள் செத்துக் கொண்டிருக்கேக்க உந்த தி.மு.க(ள்வர்) தான் தமிழ் நாட்டில ஆட்சியில் இருந்தது. அப்ப இந்திய அரசாங்கத்தோடு சேர்ந்து சண்டை நிறுத்தக்கூடாது எண்டு சொன்ன பொறுக்கியள் உவங்கள்.

உவன் கிழடன் கருணாநிதி இருக்கிறான் தானே இன்னமும் சாகாமல்... ஒரு நேரம் உண்ணாவிரதமிருந்து உலகத்தையே போக்காட்டினவன் தானே. உவங்கள் எங்கட மக்களில அக்கறை எண்டால் யாரு நம்புவாங்கள்.

நான் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கிறேன் நீங்கள் ஒரு அறிக்கை விடுங்கோ எண்டு மன்மோகனிட்ட சொல்லிட்டு கடைசியா எங்களை பேயனாக்கினான். இஞ்ச இருக்கிற கொஞ்ச கூத்தமைப்பு கூத்தாடிகள் உதை வைச்சு உங்கள் எல்லாரையும் பேக்காட்டுறாங்க
தமிழ் நாட்டில ஜெயலலிதா உவங்கள் தி.மு.கவின்ர கதிரையொல்லாத்தையும் பிடுங்கினவுடன மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும். அதுக்கு ஏமாளித் தமிழ்நாட்டை ஏமாற்ற ஈழத்தழிழர் ஆதரவு எண்ட கோலை கையில எடுத்திட்டான் உந்த கிழவன் உது சனத்திற்கு நல்லா தெரியும்.

உதைவிட சண்டைக்கு ஆயுதங்கள் வழங்கினது முதல் எல்லாமே இந்தியா தான். உங்களுக்கு தெரியாது புலிகளை அழிக்க வேண்டும் எண்டு கங்கணம் கட்டினதே இந்தியா தான். புலிகளால தனக்கு ஆபத்து வரலாம் எண்டு தான் இந்தியா எல்லாத்தையும் செய்து முடித்துவிட்டு இண்டைக்கு நல்ல பிள்ளை போல ரயில் பாதையும் வீதியும் போட்டுத்தாறேன் எண்டு சொல்லுறதும்.

சைக்களிள் தாறேன். வீடு கட்டித் தாறேன் எண்டும.; வாறான் உந்த இந்தியா தமிழ் மக்களுக்கு எண்டைக்கு துரோகியும் எதியும் தான். 1987ம் ஆண்டு அமைதிப் படை எண்ட பெயரில் எங்கட நாட்டுக்குள்ள வந்து எங்கட பொம்பிளைகளின்ர கற்பை சூறையாடி எங்கட சனத்தை கொன்று தீர்த்தான்.

அப்பவே நாங்கள் இதைப் புரிஞ்சிருக்க வேண்டும். உவன் தன்ர நலனுக்காக எங்களை கொல்லவும் அழிக்கவும் தயங்க மாட்டான் எண்டதுக்கு உந்த சண்டையே நல்ல ஒரு உதாரணம். இந்தியா ஒரு துரோகி தமிழர்களை வைத்து மானங்கெட்ட புழப்பு நடத்தும் வேசிக்கு சமானம்.

உந்த இந்தியாவை நம்பி இந்தியாவை காட்டி எங்கட கூட்டமைப்பு கூத்தாடிகளும் சனங்களைப் பேக்காட்டிக்கொண்டு இருக்கிறாங்க. உந்த லட்சணத்தில பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் லண்டனில் நடைபெறும் உலக தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள தி.மு.க அழைத்திருப்பதும் டெசோ எண்ட ஒண்டை வைச்சு தி.மு.க ஆட்சியைப் பிடிக்கிறதுக்கும் ஈழத்தமிழர்கள் எண்டு ஒரு கூட்டம் எப்பவும் இப்படியே இருக்கனும் இது தான் எங்களை வைச்சு புழப்பு நடத்துறவங்கட தேவை.

இதைப் பாருங்கோ நீங்கள் சரியா விளங்கிக்கனும் இல்லையெண்டால் நாளைக்கும் இப்படியே தான் இருக்கவேண்டும். இந்தியாவும் இந்திய அரசியல்வாதிகளும் எங்களுக்கு ஒண்டு தரமாட்டாங்க அவங்கள் துரோகிகள் தான்.

அது நிக்கட்டும் நானும் கொஞ்சம் உந்த பிரிஎப் காரரிட்ட கேக்கிறன் பாருங்க, நீங்கள் எங்கட மக்களிண்ட பிஞ்ச தசைகளை காட்டி எங்க உறவுகளிட்ட வாங்கின பணத்திலை இவனை கூப்புட்டு என்ன செய்யப்போறயள். இவனுக்கு நீங்களை கல்லை வைக்கிற பணத்திலை இஞ்ச செல்லால அழிஞ்ச வீட்டுக்குள்ள மழைக்கு ஒதுங்க இடமில்லாமல் நிக்கிற மக்களுக்கு உதவி செய்யலாமெல்லே!

ஊர்கிழவன்

1 comments :

Anonymous ,  November 4, 2012 at 5:14 PM  

They try their maximum to dramatize
the tamils of Srilanka and the whole world.As long as we don't have the clarity of mind,we will be cheated for ever by these well experienced actors and actresses.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com