லயன் எயார் பயணிகள் விமானத்தை சுட்டுவீழ்த்திய புலி யாழ்பாணத்தில் கைது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பயணிகள் விமானச் சேவையில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதுடன் அதில் பயணித்த பலர் உயிரிழந்திருந்தனர். இவ்விமானம் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது என்பதை புலிகள் மறுத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இராணுவப் புலனாய்வுத் துறையினரின் விசாரணைகளை தொடர்ந்து விமானத்தை சுட்டுவீழ்த்திய புலி உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் புலனாய்வு அறிக்கையின் பிரகாரம் பொலிஸ் விசேட பிரிவொன்றினால் கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதி யுத்தநேரத்தில் தப்பி வந்து சரணடையாமல் இவர் ஒழிந்திருந்தாக விசாரணைகளில் புலனாகியுள்ளது. இக்கைது தொடர்பான சகல விடயங்களும் எதிர்வரும் நாட்களில் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக இலங்கைநெற் அறிகின்றது.
புலிகளின் விமான எதிர்ப்பு பிரிவினைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இக்கைது சாத்தியமானதாக பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார். மேலதிக விபரங்கள் தொடரும்....
0 comments :
Post a Comment