Friday, November 23, 2012

புலிகளின் பங்கரவாத நடவடிக்கைகளை அறிவோம்- பிரித்தானியா

சிறுவர் போராளிகளை பயன்படுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடூரத்தைப் பற்றியும் நாம் அறிந்துள்ளோம் என பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் றொபி புலொச் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது சீனன்குடா கடற்படை முகாம், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளங்கள், இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களையும் அவர் பார்வையிட்டுள்ளார்.

இங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி விடயங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள பல நல்ல திட்டங்களையும் கண்டோம்.

ஐக்கிய இராச்சியம், இலங்கையின் சகல பகுதிகளிலும் நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்தை கொண்டுவர தனது உதவியை தொடர்ந்து வழங்கும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com