எமது உரிமைகளை பாதுபாப்பீர்! சமுர்த்தி உத்தியோகித்தர்கள் ஆர்ப்பாட்டம்.
சமூர்த்தி உத்தியோகத்தர்களின் உரிமையை பாதுகாக்கும் திவிநெகும திணைக்கள சட்டமூலத்தை அங்கீகரிக்குமாறு கோரி, பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. சமூர்த்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளை பாதுகாத்து, அவர்களை பலப்படுத்துவதற்கான திவிநெகும சட்டவரைவு, அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சகல சமூர்த்தி உத்தியோகத்தர்களினதும் ஆசிர்வாதத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தை, சவாலுக்குட்படுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, மாகாண சபைகளின் அங்கீகாரத்தை பெற வேண்டுமென, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சகல மாகாண சபைகளிலும் திவிநெகும சட்டவரைவு சமர்ப்பிக்கப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்களின் அங்கீகாரமும் இதற்கு பெறப்பட்டது. மாகாண சபைகளில் திவிநெகும சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், இச்சட்டமூலத்தை பலப்படுத்தும் வகையில், ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
வட மாகாண சபை ஸ்தாபிக்கப்படாமையினால், இம்மாகாண சபையின் அங்கீகாரத்தை பெறுவது தொடர்பில், உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. வடபுல சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள், எவ்வாறேனும் திவிநெகும திணைக்கள சட்டவரைவை அங்கீகரிக்குமாறு கோரி, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது உயர்நீதிமன்றம் உரிய
தீர்ப்பினை, சபாநாயகருக்கு கையளித்துள்ளதுடன், சபாநாயகரினால் இன்று
பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன், சட்டவரைவை அங்கீகரித்து, தமது எதிர்காலத்தை ஒளிமயமாக்குமாறு கோரி, சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 comments :
Post a Comment