Saturday, November 3, 2012

ஆனந்த விகடன் கிண்டிய முன்னாள் போராளி.. இன்னாள் பாலியல் தொழிலாழி அல்வா!

(– விசுவாசன்-)'முன்நாள் போராளி இன்று ஒரு பாலியல் தொழிலாளி' என்ற தலைப்பில் பேட்டி ஒன்று இன்று லேட்டஸ்ரா வலு லேட்டாக முன்னாள் போராளிகள் பற்றி வந்துள்ளது. . ஒரு முன்னாள் போராளியின் பேட்டி என்று கூறி விட்டு பெண்புலிகளின் உருவாக்கம், புலிகளின் தலைவர் பிரபாகரனை துதி பாடும் வரிகள், இலங்கை இராணுவம் கூட்டாக பாலியல் கொடுமை செய்தது என்பதுடன் மட்டுமல்லாது புதிதாக அமைச்சர் ஒருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் மிக தெளிவாக பேட்டியளித்தள்ளார். பேட்டி வந்துள்ள இந்த நவம்பர் மாதம் கூட விடுதலைப் புலிகளால் மிகவும் உணர்வு பூர்வமாக கொண்டாடப்படும் ஒரு மாதம் என்பதையும் நாம் கவனத்தில் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த பேட்டியை யாழ்ப்பாணத்தில் வைத்து எடுத்தவர் அருள் இனியன் என்றும் விகடன் கூறுகிறது.

இனி விடயத்துக்கு வருவோம். முன்னாள் போராளிகள் பலர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் தான். ஆனல் இந்த பேட்டியில் பில்டப் செய்யப்பட்ட போராளி நிச்சயமாக இன்னும் விடுதலை செய்யப்படவேயில்லை! காரணம் சோதியா சிறப்பு படையணியில் முக்கிய பதவியில் இருந்த ஒருவர் தான் இந்த பேட்டி கொடுத்தவர் என்றால் அவர் உண்மையிலேயே தற்போதும் புனர்வாழ்வு முகாமில் தொழில் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார் அல்லது உளவியல் பயிற்சி நெறியில் பங்குபற்றிக்கொண்டிருப்பார் அல்லது பூசாவிலோ வெலிக்கடையிலோ தான் இன்னும் இருந்திருப்பார். 10 வருடங்களிற்கு மேல் 1995 முதல் இயக்கத்தில் இருந்தவர். ஜெயசிக்குறு சண்டையில் ஈடுபட்டவர். அதுவும் இவர் சரணடையாது வவுனியா முகாமில் வைத்து கைது செய்யப்பட்டவர் என்று வேற கூறுகிறார். கேட்கவே தேவையில்லை இவரும் தமிழினி ரேஞ்சில் தான் உள்ளவராக இருக்கவேண்டும். ஆரசியல் துறை தமிழினியே இன்னும் விடுதலை செய்யப்படாத நிலையில் இந்த போராளி மட்டும் விடுபட்டது பெரிய அதிசயம் தான்.

இந்த பேட்டியில் நவாலி ஆலயம் மீதான விமானத் தாக்குதலில் தான் அகப்பட்டதாக சொன்ன இந்த போராளிக்கு நாவாலி தாக்குதலில் உண்மையில் எத்தனை பேர் செத்தார்கள் என்று கூடவா தெரியாது? ஒரு போராளியாக 10 வருடத்திற்கு மேல் இருந்தவர். நவாலி தேவாலய விமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர். தன் தாய் தம்பியை இழந்தவர். எப்படி வைக்கிபீடீயாவில் வந்த 125 பேர் மட்டில் இறந்தது என்ற தொகையை அப்படியே சொல்கிறாரர். இந்த தாக்குதலில் 147பேர் கொல்லப்பட்டார்கள் என்பது அன்று அந்த தாக்குதலில் அகப்பட்ட அனைவருக்கும் தெரியும். அது எப்படி முன்னாள் போராளி ஒருவர் அதுவும் முக்கிய பதவி வகித்தவருக்கு தெரியமால் போனது. சரி அவர் மறந்து போயிருந்தாலும் சட்டென்று கேட்டால் ஒரு 150பேரளவில் என்று தானே சொல்லியிருப்பார். இந்த 125 என்ற தொகை எப்படி வந்தது எங்கே வைக்கிபீடீயாவில் பொறுக்கியதா?

முன்னாள் போராளிகள் பலரை குறிப்பாக அவர்களை புனர்வாழ்வு முகாமில் சந்தித்தவன் என்ற முறையில் இன்னுமொரு கேள்வி? மெனிக் பார்மில் கைது செய்யப்பட்ட போராளிகள் அனைவரும் உடன் கொண்டுசெல்லப்படும் முதல் இடங்கள் பம்பைமடு, வெலிகந்த, பூசா, அல்லது வெலிக்கட. காயப்பட்ட போராளிகள் சிலரே அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அனுராதபுரத்தில் இராணுவத்தை விட விமானப்படையின் முக்கிய முகாம்களே உள்ளது. வவுனியாவில் உள்ள முகாம்களில் தாம் விசாரிக்கப்பட்டதாக சில முன்னாள் போராளிகள் சொன்னார்கள். அனால் அனுராதபுரத்திற்கு கொண்டு சென்று விசாரித்ததாக யாரும் கூறவில்லை. அனுராதபுரத்தில் அரசியல் கைதிகள் மட்டுமே சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். அதுவும் இராணுவத்தின் பொறுப்பில் இல்லை. அது ஒரு அரச சிறைச்சாலை. விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை பெற்ற அல்லது தீர்ப்புக்காக இருக்கும் கைதிகளே இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு வேளை அனுராதபுரம் சிறை கலவரங்கள் பற்றி அண்மையில் வந்த செய்திகள் இந்த முன்னாள் போராளியின் கற்பனையில் வந்திருக்கலாம் அல்லது பேட்டி எடுத்தவர் பொறுக்கியிருக்கலாம்.

ஆனந்தபுரம் தாக்குதல் பற்றிய தகவலிலும் பல ஓட்டைகள் உள்ளது. இந்த முன்னாள் போராளி சோதியா படையணியின் முக்கிய போராளி என்று கூறும் விகடன் பேட்டியில் ஆனந்தபுரத்தில் 700 பேர் கொல்லப்பட்டதாக எழுந்தமானமாக சொல்கிறார். சோதியா படையணியின் சிறப்பு தளபதியான விதுசா இந்த ஆனந்தபுரம் சமரிலேயே கொல்லப்பட்டார். சோதியா படையணியின் முக்கிய தளபதி விதுசா மற்றும் உதவித் தளபதி மோகனா உட்பட பல சோதியா படையணி போராளிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார்கள். இந்த சண்டையில் 700 போராளிகள் கொல்லப்படவில்லை மொத்தம் 525 போராளிகளே கொல்லப்பட்டார்கள்.

இதில் இன்னுமொரு விடயம் இரசாயனக் குண்டு அடித்து 700 பேர் கொல்லப்பட்டாக இந்த போராளி கூறுவதும் ஒரு பெரிய புரளி. முன்னாள் போராளிகள் அனைவருக்கும் தெரிந்த ஒரு ரகசியம் புலிகளின் தலைமை இராணுவத்தால் மேற்கொண்ட பெட்டி வடிவ சுற்றிவழைப்பில் ஆனந்தபுரத்தில் மாட்டிக் கொண்டார்கள். பிரபாகரன் உட்பட ஆயிரக்கணக்கான புலிகள் இராணுவம் மீதான பாரிய தாக்குதலை நடாத்த திட்டமிட்டு தம் படையணிகளை தயார் படுத்துகையில் தான் இந்த சுற்றி வளைப்பு இடம் பெற்றது. புலிகளின் படையணிகளை பின் பக்கமாக பெட்டி வடிவில் சுற்றி வழைத்த இராணுத்தி;ன் பாரிய தாக்குதலில் புலிகளின் நடுத்தர தளபதிகளில் முகால்வாசிப்பேர் கொல்லப்பட்டனர். புலிகளின் தலைவர் இந்த தாக்குதில் இருந்து காப்பாற்றவே தீபன் தலைமையில் இந்த போராளிகள் தம் உயிர்களை அர்பணித்தது புலிகளின் தலைவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த முன்னாள் பிராதன போராளிக்கு இந்த விடயங்கள் தெரியாது போனதன் மர்மம் என்ன?

இன்று வன்னயில் விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் சும்மா விடுவிக்கப்படுவதில்லை. இவர்கள் விடயத்தில் இலங்கை மிகவும் உன்னிப்பாக கண்ணுக்குள் எண்ணை ஊத்தி கவனித்துக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் இந்த போராளிகளை இணைக்க முன்பாக இவர்களிற்கு தொழில் மொழி மற்றும் பல்வேறு பயிற்சிகளுடன் முக்கியமாக உளவியல் ரீதியான பல பயிற்சிகள் பரீட்சைகள் வைக்கப்பட்டே இவர்களை விடுதலை செய்யப்படுகிறார்கள். அதுவும் மிகவும் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் மீது கடுமையான ரிஸ்க் அஸஸ்மன்ற் செய்து அதன் பின்னரே விடுவிக்கிறார்கள். இந்த நடைமுறை வடக்கிற்கு மட்டுமே. கிழக்கில் சில முன்னாள் போராளிகள் அனாதரவாக விடப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுவது உண்மை. ஆனால் வன்னியில் போராடிய முக்கிய போரளிகள் மிகவும் கவனமெடுத்தே விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்கள் தொடர்ந்த கண்காணிப்பிலேயே இன்றும் இருக்கிறார்கள். பணத்திற்கு விலை போவார்கள் என்றால் மீண்டும் இவர்களை தடுத்து வைக்க புலனாய்வுதுறை தயாராகவே இருக்கிறது.

சரி அதையெல்லாம் தான் விடுவேம். புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் எல்லோருமே ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமானவர்கள். அதுவும் வன்னியில் இருந்த போராளிகள் குறிப்பாக 10 வருடங்களிற்கு மேல் இருந்த இந்த போராளி நிச்சயம் ஒரு மன உறுதி கொண்ட தன் சக போராளிகளை மதிக்க தெரிந்த ஒருவராக தானே இருக்கவேண்டும். பல போராளிகளின் உயிரைக் காக்க ஒரு பெண் போராளி தன் உடலை குண்டின்மேலயே கவசமாக போட்டு வெடிக்க வைத்த சம்பவங்களை கண்ட இந்த போராளி எப்படி தன் சக தோழிகளின் வாழ்க்கை பற்றி எந்த வித கவலையும் இன்றி இப்படி பேட்டி கொடுத்திருப்பார்? பல ஆண்டு காலங்கள் ஒன்றாக இருந்தவர்கள். தமிழ் சமூகத்தின் போக்கை நன்கே உணர்ந்தவர்கள். தாம் சொல்லும் விடயங்களால் தனது சக போராளிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை உணர்ந்தவர்கள். இப்படி வெளிப்படையாக வந்து பேசுவார்களா?

இன்று இந்த முன்னாள் போராளி கூறிய கற்பழிப்பு கதைகள் திருமணமாகாதா ஆயிரக்கணக்காக முன்னாள் பெண் போராளிகளின் எதிர் காலத்தை எப்படிலெ;லாம் பாதிக்கும் என்று பேட்டி கொடுத்த இந்த போராளிக்கு தெரியாதா? இவர் உண்மையிலேயே ஒரு போராளியாக இருந்திருந்தால் நிச்சயம் தெரிந்திருக்கும். வெறும் சினிமா தனமாக இன்று எழுதப்பட்ட இந்த கற்பனை பேட்டி உண்மையில் எத்தனை ஆயிரம் முன்னாள் பெண் போராளிகளை பாதிக்கப் போகிறது என்பது பற்றி விகடனுக்கு கவலை இல்லை. மாவீரர் மாத்தில் தனது வருவாயை ஐரோப்பா அமரிக்கா மற்றும் அனைத்து நாடுகளிலும் பெருக்க விகடனும் வழி கண்டுபிடித்திருக்கிறது. இது சம்பந்தமாக ஒரு முன்னாள் பெண் போராளியுடன் பேசியபோது அவர் சொன்ன பதில் 'அண்ணா பாவம் அந்த பெண் ஒரு வேளை இப்ப முன்னாள் பெண் போராளி பாலியல் தொழிலாளிகளுக்குதான் யாழ்ப்பாணத்தில் நல்ல மவுசோ என்னவோ' என்றார்.

1 comments :

சாமி ,  November 3, 2012 at 12:00 PM  

விசுவாசன், முன்னாள் போராளி இன்னாள் விபச்சாரி அல்லவா! என நீங்கள் விபச்சாரிகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள்.. விபச்சாரிகள் தமது உடம்மைப் விற்றே பிழைப்பவகள். அது அவர்களது தொழில்.. ஆனால் இங்குள்ள கூட்டை பற்றி நீங்கள் பேசியிருக்கவேண்டும். அக்கூட்டு யாதெனில் ஊடக விபச்சாரமும் புலிவிபச்சாரமும் இணைந்த கூட்டு சும்மாவா.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com