பிரதம நீதியரசுக்கு எதிரான குற்றப் பிரேரணையைக் கண்டிக்க வேண்டும் -சந்திரிக்கா பண்டாரநாயக்க
நீதித்துறையை பாதுகாப்பது எமது கடமை அதன் மூலம்தான் நாம் எம்மையும் எமது அடிப்படை உரிமைகளை காப்பாற்ற முடியும். பிரதம நீதிபதி ஷிராணி பண்டார நாயக்காவை குற்றப்பிரேரணை மூலம் பதவி விலகும் நடவடிக்கையை 'ஜனநாயக்தை நேசிக்கும் சகலரும் கண்டிக்க வேண்டும் என இலங்கையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதித்துறையை பாதுகாப்பது எமது கடமை அதன் மூலம்தான் நாம் எம்மையும் எமது அடிப்படை உரிமைகளை காப்பாற்ற முடியும்' அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறுகிய, அரசியல் இலாபநோக்கில் இதை பார்க்க வேண்டாம்.
நீதிசேவை உத்தியோகத்தர்களின் நடத்தையை ஆராய்வதற்கு நான் ஜனாதிபதியாக இருந்த ஸ்ரீPலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 2000 ஆம் ஆண்டு அரசியல் சட்டமூலத்தில் கூறப்பட்ட சட்டங்களை கொண்டுவருவதற்கும் நிலையியல் கட்டகளை அரசு திருத்தவில்லை.
ஆனால் இதற்கு பதிலாக ஜே.ஆர் ஜயவர்தனவின் அரசியல் சட்டத்தையும் நிலையியற் கட்டளைகளையும் ஒரு சுதந்திர கட்சி அரசாங்கம் பின்பற்றுவதையிட்டு தான் ஆச்சரியப்படுகின்றேன் என்றார்.
0 comments :
Post a Comment