அனுமதியின்றி அட்டை பிடித்தவர்கள் கடற்படையிடம் சிக்கினர் -படங்கள் இணைப்பு
சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் நீரியில் வளத் துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.இச்சம்பவம் இன்று அதிகாலை 6 மணியளவில் குருநகர் கடலில் இடம்பெற்றுள்ளது.சட்டவிரோதமான முறையில் றோலர் படகுகளைப் பயன்படுத்திஅட்டைபிடித்தக் கரைதிரும்பிக் கொண்டிருந்தபோதே இவர்கள் கடற்படையினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது இவர்களிடமிருந்து 2500 இற்கும் அதிகமான அட்டை, அட்டை பிடிப்பதற்கு பயன்படுத்திய இரண்டு றோலர் படகுகள் மற்றும் இழுவை வலைகள் உள்ளிட்ட கடற்றொழில் உபகரணங்களும் சாதனங்களும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் மடக்கி பிடிக்கப்பட்டவர்களை யாழ்.நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
0 comments :
Post a Comment