Wednesday, November 14, 2012

மிதக்கும் வெனிஸ் நகரம் வெள்ளத்தில் மூழ்குகின்றது

கடந்த 150 வருடங்களில் இல்லாத அளவிற்கு வெனிஸ் நகரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறதோடு வெனிஸ் நகரமே வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. ஏற்கனவே மிதக்கும் நகரான வெனிஸ், தற்போது நீரால் சூழப்பட்டு மூழ்கும் நகராக மாறியுள்ளது.

மத்திய வெனிஸ் நகரின் 70 சதவிகித பகுதிகளில் 59 இன்ச் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதாம். இதனால் சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இருப்பினும் இதை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

வெனிஸ் நகரின் பிரபலமான செயின்ட் மார்க்ஸ் சதுக்கம் சுற்றுலாப் பயணிகளால் எப்போதும் நிரம்பி வழியும். ஆனால் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு தற்போது வெள்ளம் மட்டுமே கரைபுரண்டோடிக் கிடக்கிறது.

தெருக்கள் தோறும் வெள்ளம் அபாயகரமான அளவில் ஓடுவதால் பல இடங்களில் மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பல கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்குள் மழை நீர் புகுந்து வர்த்தகத்தை பாதித்துள்ளது.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com