Wednesday, November 14, 2012

மெனராகலையில் சிவப்பு மழை பிரதேசவாதிகள் அச்சத்தில்

மெனராகல மாவட்டத்திலுள்ள செவனகல பிரதேசத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் சிவப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தன என செய்திகள் வெளியாகியுள்ளன.செவனகல, இந்திகொலபெலஸ்ஸ, முதலாம் இலக்க கிராமத்தில் சற்று நேரத்துக்கு முன்னரே சிவப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வுழமைக்கு மாறாக வித்தியாசமாக காணப்பட்ட மழையைக் கண்ட பொது மக்கள் இந்த மழை நீரை பாத்திரங்களில் சேகரித்துப் பார்த்தபோது அந்நீர் சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்று காணப்பட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை மழை நீர் பட்ட இடங்களில் எல்லாம் சிகப்பு நிறத்திலான படிமங்கள் காணப்படுவதாகவும் வீட்டு கூரைகள், இலைகள் மற்றும் ஆடைகளிலும் சிகப்பு படிமங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் வானிலை அவதான நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் மனராகல மாவட்டத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com