Monday, November 12, 2012

வெலிக்கடையில் பலியான கைதிகளின் சடலங்கள் கையளிப்பு

வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பலியான 18 கைதிகளின் சடலங்கள் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்; தெரிவித்துள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் சோதனையிடச் சென்ற விசேட அதிரடிப்படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து 27 கைதிகள் உயிரிழந்தனர்

இவர்களில் 18 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளன.


மேலும் காயமடைந்த 20 கைதிகள், 3 அதிரடிப்படை வீரர்கள் மற்றும் 4 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதிகள் தொடர்பில் இன்று முழுமையான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்றார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com