திருநெல்வெலிப் பகுதியில் இளைஞர்கள் மீது மர்மக் குழு தாக்குதல்
யாழ். திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் மைதானத்திலிருந்து கூடிக் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது இன்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடடென்று பதிவு செய்யப்பட்டுள்ளது.இச்சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் பாரதிபுரத்தைச் சேர்ந்த செல்வநாயகம் சிவலோசன் வயது 24 என்ற இளைஞர் ஒருவரும் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது..
முச்சக்கர வண்டியென்றிலும் மோட்டார் சைக்கிளிலும் கறுப்பு நிறத்திலான முகமூடி அணிந்து வந்த மேற்படி குழுவினர், அங்குள்ள மைதானத்தில் இருந்து இளைஞர்களை கலைத்து கலைத்து வாளால் வெட்டியுள்ளனர்.
வெட்டிய குழுவினர் தாம் கலா மன்றத்தைச் சார்ந்தவர்கள் என்று தெரிவித்துச் சென்றதாக பொது மக்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment