வடக்கிற்கு வரும் இலங்கையின் ஆளுநர்கள்
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெவுள்ள ஆளுநர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தரும் அனைத்து மாகாண ஆளுநர்களும் வடக்கில் உள்ள முக்கிய இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர் என வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அனைத்து ஆளுநர்கள் மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதற்தடவையாக யாழ்ப்பாணத்தில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தலமையில் ரில்க்கோ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ளவென இலங்கையின் ஒன்பது மாகாண ஆளுநர்களும் இம் முறை யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளனர்.
மாநாட்டைத் தொடர்ந்து மறுநாள் நல்லூர் ஆலையம், நயினாதீவு, நெடுந்தீவு, முல்லைத்தீவு ஆகிய இடங்களிற்கும் அனைத்து மாகாண ஆளுநர்களும் விஜயம் செய்யவுள்ளனர்.
0 comments :
Post a Comment