கிராம அலுவலர்கள் இடமாற்றம் கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் பணிபுரியும் பல கிராம சேவகர்களின் திடீர் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தந்தப் பகுதி கிராம சேவகர் அலுவலகங்களின் முன்பாக மக்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.திருநகர் வடக்கு மற்றும் தெற்கு, கனேசபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே மேற்படி ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கிராம சேவகர்களின் இடமாற்றத்தை இத்துச் செய்யுமாறு வலியுறுத்தி;, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதிஸ்வரனிடம் ; மகஜர் ஒன்றையும் இவர்கள் கையளித்தனர்.
கடந்த சில மாதங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் பணிபுரியும் கிரம சேவகர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களுடைய இடமாற்றத்திற்கு தகுந்த காரணங்கள் எதுவும் இதுவரைக்கும் தெரிவிக்கப்படவில்லை.
இதனைத் தடுக்குமாறு கிராம அமைப்புக்கள் இணைந்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூவதி கேதிஸ்வரனிடம் கோரிக்கை விடுத்தோம்.. எமது கொரிக்கை தொடர்பில் பரிசீலிப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே இவ்விடமாற்றமானது திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது தெட்டத் தெளிவாக புலப்படுகின்றது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
1 comments :
It's clear specially government jobs are transferable,the people concern only need a replacement.
Post a Comment