Thursday, November 8, 2012

அதிக கோபப்படாதீங்க… தோலில் சுருக்கம் விழும்!

வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது. இதற்கு காரணம் கோபப்படுவது தான். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முகத்தில் விரைவில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் சிலருக்கு போதிய சத்து தோலில் இல்லாததாலும் சுருக்கம் ஏற்படுகிறது. இத்தகைய முகச்சுருக்கத்தை நீக்க சில வழிகள் உள்ளன.

முகச்சுருக்கத்தை நீக்க சில டிப்ஸ்…

சந்தனப்பவுடரில் கிளிசரின், பன்னீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொண்டு, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்துவந்தால் முகச்சுருக்கம் நீங்கும்.

பாலுடன் ஓட்ஸ் மாவு மற்றும் சந்தனப் பவுடர் கலந்து முகத்தில் பூச சுருக்கம் மறையும்.

முட்டையின் வெள்ளை கருவோடு தேனைக் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் மறைந்து முகமானது பிரகாசமாய் இருக்கும்.

பப்பாளிப் பழத்தை நன்கு அரைத்து, அதில் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், முகம் சுருக்கம் நீங்கி முகம் பொலிவு பெறும்.

எலுமிச்சை தோலை அரைத்து அத்துடன் உருளைக்கிழங்கு, எலுமிச்சைச் சாறு, சிவப்பு சந்தனம் ஆகியவற்றை சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து, மெல்லிய மஸ்லின் துணியால் முகத்தை மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணிநேரம் கழித்துக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.

முக அழகு நம் மனதோடு தொடர்புடையது. கொஞ்சம் கோபப்பட்டாலும் முகம் பார்க்க சகிக்காது. அதிகம் கோபப்பட்டால் முகம் சுருங்கிவிடும் எனவே ஆகவே கோபத்தைக் குறைத்து எப்போதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள்!!! அதுவே நம்மை உலக அழகியாக்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com