நாட்டில் இனங்களை அடையாளப்படுத்தும் முறைமை ஒழிக்கப்பட வேண்டும்
சிங்களவர்,தமிழர் மற்றும் முஸ்லிம் என அடையாளப்படுத்தும் நடைமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும். நுவரெலியாவில் வாழும் மக்களை இந்திய வம்சாவளித் தமிழர்கள் என அடையாளப்படுத்தக் கூடாது என்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள். எனினும் அவர்களை இந்திய சிங்களவர் என குறிப்பிடுவதில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும்.
இந்திய அரசாங்கம் இந்தத் திட்டங்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment