மாணவியுடன் சேஷ்டையில் ஈடுபட்ட குடும்பஸ்தர் நையப்புடைப்பு
யாழ்.உடுவில் பகுதியில் 16 வயது பாடசாலை மாணவியுடன் தகாத உறவை ஏற்படுத்த முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் பொது மக்களால் நையப்பபுடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று அதிகாலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
உடுவில் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையென்றில் கல்வி கற்கும் மேற்படி மாணவியுடன் கையடக்கத் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்திய 27 வயதுடைய இந்நபர் நட்புடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவியுடன் பாலியல் ரீதியில் உறவு கொள்ள முற்பட்டபோது உறவினர்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்தும குறித்த நபர் நேற்று காலையில் இவ்வாறதொரு தகாத உறவில் ஈடுபட முயன்றபோது பொது மக்களால் நையப்பபுடைக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக பொலிஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment