ஐ.நாவில் இரகசிய வாக்கெடுப்பு அமெரிக்க வெற்றி இலங்கைக்கு ஆதரவான நாடுகள் வெளியேற்றம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 புதிய உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 131 வாக்குகளை பெற்று அமெரிக்கா தெரிவாகியுள்ளதுடன் அதிகப்படியான வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.அமெரிக்காவை தவிர ஜேர்மனி, அயர்லாந்து, ஆஜென்ரீனா, பிறேசில், ஐவரிகோஸ்ட், எஸ்தோனியா, எதியோப்பியா, காபோன், ஜப்பான், கசகிஸ்தான், கென்யா, மொன்ரனிக்ரோ, பாகிஸ்தான், தென்கொரியா, சியராலியோன், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், வெனிசுவேலா ஆகிய நாடுகளும்; பேரவைக்குத் தெரிவாகியுள்ளன.
இலங்கைக்கு நெருங்கிய நாடுகளான சீனா, ரஸ்யா, கியூபா ஆகிய நாடுகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்காது. ஆமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக ஜேர்மனி 127 வாக்களையும், அயர்லாந்து 124 வாக்குகளையும் பெற்றுள்ளன.
இதேவேளை பெலாஸ், இலங்கை, ஈரான் மற்றும் அஸர்பைஜன் அடங்களாக மனித உரிமைகள் பேரவையில் இடம்பிடிப்பதற்காக முன்னர் போட்டியிட்ட நாடுகளுக்கு எதிராக வெற்றிகரமான பிரசாரத்தை மனித உரிமை ஆர்வலர்கள் முன்னெடுத்துள்ளனர் என்று அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரகசிய வாக்கெடுப்பு நியுயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச்சபையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றதுள்ளது.
0 comments :
Post a Comment