முன்னாள் புலிகள் இருவருக்கு திருமணம் அரச செலவில் இராணுவம் செய்து வைத்தது
பங்கரவரா தடுப்பு பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் இருவருக்கு வவுனியா, பூந்தோட்டம் முகாமில் இந்து கலாசார முறைப்படி திருமணம் நேற்றைய தினம் செய்து வைக்கப்பட்டது.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுதர்ஷன் மற்றும் முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த சிற்றம்பலம் பிரியதர்ஷினிக்குமே திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். என்பதோடு இவர்களது திருமணத்திற்கான முழுச் செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த திருமண வைபவத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, அமைச்சின் செயலாளர் வித்தானகே, புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி உட்பட பலரும் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment