செலிங்கோ நிறுவன வழக்குகளை நான் விசாரணை செய்யப்போவதில்லை- பிரதம நீதியரசர்
செலிங்கோ நிறுவனம் தொடர்பான வழக்குகளை தான் விசாரணை செய்யப்போவதில்லை என்று பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கா இன்று திங்கட்கிழமை அதிரடியாக அறிவித்துள்ளார்.பிரதம நீதியரசர் மீது பாராளுமன்றில் பிரேரணை சமர்பிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இதனை இன்று அறிவித்துள்ளார்.
செலிங்கோ நிறுவனத்துடன் தொடர்புடையதான கோல்டன் கீ மற்றும் ஸ்ரீராம் கம்பனி தொடர்பான வழக்குகளை அக்கட்சிக்காரர்களின் வேண்டுகோளுக்கிணையவே விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் இனி அவ்வழக்குகளை தான் விசாரிக்கப்போவதில்லை என்றும் அவர் தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment