கிளிநொந்சி இராணுவத் தளபதியுடன் விருந்துண்டு மகிழும் பிரதேச மக்கள்! படங்கள்.
கடந்த 14ம் திகதி வன்னியிலே பெரும் விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான பிரதேச மக்கள் கலந்து கொண்ட இவ்விருந்துசரத்தினை ஏற்பாடு செய்திருந்தவர் வேறு யாருமல்ல. கிளிநொச்சியின் இராணுவத் தளபதியாகும். தமிழர் பிரதேசத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உலகிலுள்ள சில நாடுகளும் குரலெழுப்புகின்றபோது வன்னிலே அதே இராணுவத்துடன் மக்கள் விருந்துண்டு பின்னிப்பிணைந்திருக்கும் இப்படங்கள் என்ன செய்தியை சொல்கின்றது.
இப்படங்களை பார்கின்றபோது வன்னி மக்களினுடைய மே 2009 இற்கு முந்திய இருண்ட யுகம் ஞாபத்திற்கு வருகின்றது. முழு வன்னிநிலப்பரப்பையும் வல்வெட்டித்துறையிலிருந்து சென்று ஆக்கிரமித்திருந்தää அதாவது அவர்களின் பாஷையில் சொல்வதானால் தமிழ் மக்களின் தேசியத் தலைவருடன் அம்மக்களால் இவ்வாறான ஒர் நிகழ்வில் கலந்து கொள்ள முடிந்திருந்தா? மாறாக அவருடன் ஒரு நேர உணவினை உண்ணுவதாயின் வெடித்து சிதறுவதற்கான நாள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். கரும்புலிகள் என தம்மை அர்ப்பணித்து காத்திருந்தவர்களுக்காக திகதி நிர்ணயிக்கப்பட்டால் மாத்திரமே அவர்களால் பிரபாகரனை நேரில் சந்திக்கவும் அவருடன் ஒரு நேர உணவுண்டு புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொள்ளவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அங்கிருந்த மக்களாலோ அல்ல போராட்டத்திற்கு என தம்மை அர்ப்பணித்திருந்த இளைஞர் யுதவதிகளாலோ பிரபாகரனை கண்ணால்கூட பார்க்க முடியாமலிருந்தது.
ஆனால் இன்று அந்த இருண்ட யுகம் முடிவுக்கு வந்துள்ளமையை இந்நிகழ்வுகள் ஊர்ஜிதம் செய்கின்றது.
விருந்துபசாரத்தின் பின்னர் இடம்பெற்றுள்ள கலை நிகழ்வுகளில் சில..
0 comments :
Post a Comment