Saturday, November 3, 2012

அமெரிக்கா: கார் விபத்தில் தமிழக சிறுவன் பலி

மதுரையை சேர்ந்தவர் பாலாஜி ஜெயகண்ணன். இவர் அமெரிக்காவில் நியூஜெர்சியிலுள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் மனைவி நாகராணி, மகன் தயானேஷ் (வயது 4) ஆகியோர் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் நாகராணி தனது மகனுடன் அங்குள்ள மத்திய அவின்யூ சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது சிக்னல் எச்சரிக்கையை மீறி வேகமாக வந்த கார் சாலையை கடக்க முயன்ற 2 பேர் மீதும் மோதியது. இதில் சிறுவன் தயானேஷ் பரிதாபமாக இறந்தான். நாகராணி காயத்துடன் தப்பினார். இந்த விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த எலிசா தெம்ப்லோ என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பலியான சிறுவனின் உடலை தமிழகத்துக்கு எடுத்து வர உதவும்படி பெற்றோர் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்திடம் கேட்டு கொண்டுள்ளனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com