ஜப்பானில் கடும் பனி,காற்று பல ஆயிரம் பேர் மக்கள் பாதிப்பு
ஜப்பானில் கடும் பனி புயல் வீசியதால் மின்கம்பிகள் பலத்த சேதமடைந்ததுடன், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை பசிபிக் கடற்கரையோரத்தில் உள்ள ஹொகைடா தொழில்நகரில் முரோரன் பகுதியில் மணிக்கு 144 கிலோமீற்றர் வேகத்தில் புயல்காற்று வீசியுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஜப்பானின் முக்கிய நரங்களிலுள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. முக்கிய சாலைகள் முழுவதும் பனி கொட்டி கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாகவும் காற்றும் காரணமாகவும் தகவல் தொடர்பு கோபுரங்கள் சாய்ந்துள்ளதால், மொபைல் போன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புயலால் 90 ரயில்கள், 10 உள்ளூர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜப்பானிய மக்கள் பெரிதும் அவஸ்தைப்படுகின்றனர்.
0 comments :
Post a Comment