Saturday, November 17, 2012

புலிகளின் தலைவர் விநாயகம் பிராண்சில் கைது.

புலிகள் இயக்கம் பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றது. அதன் சக்கிமிக்க தலைமைகளாக கே.பி தலைமையில் ஒரு குழுவும், நெடியவன் தலைமையில் ஒரு குழுவும், விநாயகம் தலைமையில் ஒரு குழுவும் இயங்கி வருகின்றமை யாவரும் அறிந்தது. இதில் கே.பி இலங்கையில் இணக்க அரசியல் என்ற புதிய யுகத்தினுள் நுழைந்துள்ள நிலையில் விநாயகம் , நெடியவன் ஆகியோர் பிராண்ஸையும் நோர்வேயையும் தளமாக கொண்டு புலம்பெயர் தேசத்திலுள்ள புலிகளுக்கு சொந்தமான சொத்துக்களை பிரித்துக்கொள்வதிலும் அதை அனுபவிப்பதிலும் மோதலில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதும் மேலும் மறைக்கமுடியாமல்போயுள்ள உண்மைகள்.

இந்நிலையில் கடந்த 8.11.2012 வியாழக்கிழமை பிற்பகல் பாரிஸ் நகரில் வைத்து நெடியவன் குழுவின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான றேகன் அல்லது பரிதி என அழைக்கப்படுகின்ற நடராசா மதிந்திரன் எனப்படுபவர் சுட்டுக்கொல்லப்பட்டிந்தார். இக்கொலை சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறையினாரால் மேற்கொள்ளப்பட்டது என புலி ஆதரவு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு சில மணித்தியாலயங்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தமிழ் இளைஞர்கள் என்ற செய்தி புலிகளின் உள்வீட்டுக்கொலை என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்தது.

குறிப்பிட்ட இளைஞர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் பணம்பெற்றுவிட்டும் தாம் இக்கொலைகளை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள் என பிரெஞ்சுப்பத்திரிகை ஒன்று செய்திவேறு வெளியிட்டிருந்தது. ஆனால் புலிகள் தமது உள்வீட்டுக்கொலையை மறைப்பதற்கும் மக்களை திசை திருப்புவதற்கும் வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவிக்கின்றது என தெரிவித்து விட்டால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற வியூகம்வகுத்து செய்தியாளர் ஒருவரை விலைக்கு வாங்கி மேற்கண்டவாறான செய்தியை வெளியிடவைத்தகதை பெரியகதை.

புலிகளின் அத்தனை குளறுபடிகளும் வெளிச்சத்திற்கு வருகின்றது. புலிகளின் புலம்பெயர் தேசத்தின் இருதலைகளில் ஒருதலையான விநாயகம் தற்போது பிரஞ்சு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் விநாயகத்தினை கைதுசெய்த பொலிஸார் அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு விடுதலை செய்துள்ளதாக சில தகவல்களும் , இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என சில தகவல்களும் கூறுகின்றது.

எது எவ்வாறாயினும் விநாயகம் , பருதியின் கொலை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவரும் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டார் என்பதனை பிரஞ்சுப் பொலிஸார் ஊடகங்களுக்கு உறுதி செய்துள்ளனர்.

நிறைவுபெற்றகொலை அதை தொடர்ந்து இடம்பெற்றுவரும் கைதுகள் புலம்பெயர் புலிகளின் முழுக்கட்டமைப்பையும் செயலிழக்கசெய்துள்ளது என்பதை அவதானிக்க முடிகின்றது. மாவீரர் தினக்கொண்டாட்டங்களை நிகழ்த்துவற்கான ஏகபோக உரிமையை பெற்றுக்கொள்வதிலும் , அதன் வருமானத்தை பங்கிட்டுக்கொள்வதிலும் ஏற்பட்ட இணக்கப்பாட்டிற்கு வரமுடியா நிலைமையே இக்கொலை அவசர அவரசமாக மேற்கொள்ளப்பட்டதற்கான பின்னணியாகும். மேலும் மாவீரர் தினக்கொண்டாட்ட வருமானங்களை பங்கிடுவதில் சகாவின் உயிரை பலி கொடுத்த ஒரு தரப்பும் சகாக்களை சிறைவாசம் அனுப்பியுள்ள மறுதரப்பும் நிச்சயம் இந்நிகழ்வின்போது நேரடியாக மோதிக்கொள்ளும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

1 comments :

Anonymous ,  November 17, 2012 at 10:25 PM  

மூதேவிகள் எங்கு இருந்தாலும் திருந்தப்போவதில்லை.
தமிழீழம், தாயகம் என்று தமிழினத்தை அழித்து, தமிழ் மண்ணை பறிகொடுத்து, மிஞ்சியவர்களை அரைக்கோவணத்தில் அனாதையளாக, விதவைகளாக, விசர்களாக ஏன் விபச்சாரிகளாக அலையவிட்டு எதிரியின் காலில் விழுந்து கொத்துவாங்கிய வீரர் மரணமடைந்து சரித்திரம் படைத்த கதை முடிந்து விட,
இப்போ தமிழீழ விடுதலை பெயரில் புலம்பெயர் நாடுகளில் இதுவரைக்கும் சேர்த்த பணம், சொத்துக்களை சுருட்டி, தங்கள் பிழைப்புகளை, சுகங்களை தொடர்ந்தும் தக்க வைக்கும் செயல் பாடுகளில் பல மனிதத் துரோகிகள் ஈடுபட்டு வருகிறது. அதன் பிரதிபலிப்புகளை புலம் பெயர் தமிழினம் இனிமேலும் உணராவிடின், புலம்பெயர் தமிழினம் மனிதர்கள் அல்ல வெறும் முண்டங்களே.
இதுவரைக்கும் வெளிநாடுகளில் சேர்க்கப்பட்ட பணம், சொத்துக்களை நொந்து, நொடிந்து போய், ஒரு நேர உணவிற்கே வழியின்றி நடைப்பிணமாய் வாழும் வன்னி மக்களுக்கு, எந்த ஒரு புலிப்பினாமிகளும் கொடுத்து உதவ முன்வந்ததில்லை என்பதை மறக்க, மன்னிக்க முடியாது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com