Monday, November 26, 2012

மக்களுக்கு வழங்கிய கலப்பையை விற்று பையினுள் போட்டுக்கொண்ட பிரதேச சபைத்தலைவர்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் மிக அண்மையில் அரசினால் மக்களுக்கென வழங்கப்பட்ட கை உழவு இயந்திரத்தின் கலப்பையினை தனியார் ஒருவருக்கு விற்று பணத்தினை பையினுள் போட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர் இக்களவினை தனது உதவியாளரான கோவிந்தன் கடைச்சந்தியைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்தே மேற்கொள்வதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

அண்மையில் நாடளாவிய ரீகையில் நடைபெற்ற மரம்நாட்டு நிகழ்விற்காகப் பிரதேச
சபைக்கு வழங்கப்பட்ட 250 தேக்கு மரக்கன்றுகள் பிரதேச சபைச் செயலரின் திறமையற்ற நிர்வாகத்தால் பிரதேச சபைத் தலைவரின் வீட்டு வாசலயில் வெயிலில் வாடவிடப்பட்டுள்ளதை இங்குள்ள படத்தில் காணுங்கள்.


வன்னியின் வளங்களான வனங்கள் வகை தொகையின்றி அழிக்கப்பட்டுவரும்
இவ்வேளையில் மரங்களை நாட்டி மண்ணை வளப்படுத்தும் செயற்பாடுகள்
ஊக்கப்படுத்தப்படவேண்டிய நிலையில் பிரதேசசபைச் செயலரின் இந்த
நடவடிக்கைகள் மிகவும் கண்டனத்திற்குரியது.

மேலும் தனது இளநிலை உதவியாளரான கோவிந்தன் கடைச் சந்தியைச் சேர்ந்த
பிரதேசசபை அலுவரது உதவியுடன் சட்டவிரோத நடவடிக்கைகளில் பிரதேசசபைச்
செயலர் ஈடுபடுவதாகவும் பிரதேச சபைக்குட்பட்ட சிறு ஒப்பந்தவேலைகளை மேற்படி உதவியாளரது பெயரினூடாக பிரதேச சபைச் செயலாளரே மேற்கொண்டு பணம் சம்பாதிப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com