பொலிஸ் பயிற்சி கல்லூரிப் பொறுப்பதிகாரி சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு
சப்ரகமுவ பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரியும் தலைமை இன்ஸ்பெக்டருமான இந்திரசோமா ரத்நாயக்க சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி, தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவரது சடலம் அலப்பத்தையிலுள்ள வீட்டிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
விடுமுறையில் இருந்தபோதே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார்; காணிப் பிரச்சினை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment