விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் ஒருங்கிணைப்பாளர் சுட்டுக்கொலை
பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.பரிதி என்று அழைக்கப்படும் நடராசா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்டவரே இவ்வாறு மரணமானவராவார்.தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி இரவுவேளை அலுவலகத்தில் இருந்து வெளியேவந்தபோது இவர் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்,
கடந்த வருடமும் இதே காலப்பகுதியிலேயே பரிதி பிரான்சில் வைத்து இவ்வாறு இனந்தெரியாத நபர்களின் கத்திக்கு; குத்துக்குள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment