Thursday, November 8, 2012

அரசு நோயாளி ஒருவருக்கு எவ்வளவு செலவு செய்கின்றது என்பதை அறிந்திருக்க வேண்டுமாம்.

2013 ஆம் ஆண்டு முதல் ஒரு நோயாளிக்கு எந்தளவு தொகை செலவிடுகின்றோம் என்பதை அவர்கள், அறிந்து கொள்வதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்போம். இலவச சுகாதார சேவையை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச கதிர்வீச்சு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற தேசிய வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற வைபவம், இலங்கையின் கதிர்வீச்சு துறை அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது. சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்கடர் நிஹால் ஜயதிலக்க உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். அவ் நிகழ்வில், தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ஒரு நோயாளிக்கு அரசாங்கம் எந்தளவு தொகை பணத்தை செலவிடுகின்றதென்பதை நோயாளி அறிந்து வைத்திருக்க வேண்டும். சிலருக்கு 90 இலட்சம் ரூபா, 100 இலட்சம் ரூபா சில நேரம் 140 இலட்சம் ரூபாவையும் செலவிடுகின்றோம். இது தொடர்பாக எவரும் அறிந்து வைத்திருப்பதில்லை. நாம் வழங்கும் இந்த சேவையை போன்று இதனால் அடையும் நன்மையை பொது மக்கள் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 2013 ஆம் ஆண்டு முதல் ஒரு நோயாளிக்கு எந்தளவு தொகை செலவிடுகின்றோம் என்பதை அறிந்து கொள்வதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்போம். என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com