ஒபாமா மியன்மாருக்கு திடீர் விஜயம் ஆங்சான் சூகியுடனும் சந்திப்பு
.
பர்மா என்று அழைக்கப்படும் மியான்மருக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூகியை சந்தித்து நாட்டின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கம்போடியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டுக்கு செல்லும் வழியில் மியான்மருக்கு சென்றார்.முதலில் மியான்மர் ஜனாதிபதி தெய்ன்செய்ன்-ஐ சந்தித்த ஒபாமா, பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூகி-யை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தார்.இந்த சந்திப்புக்கு பின்னர் ஒபாமா கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக மியான்மரில் அரசியல் முன்னேற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்பட்டதன் மூலமாகவும், தேர்தலில் அவர் வெற்றி பெற்றதன் வாயிலாகவும் இந்த முன்னேற்றத்தை அறிய முடிகின்றது.ஜனநாயகத்தை நோக்கி நடைபோடும் முன்னேற்றம் தொடருமானால், மியான்மருடனான அமெரிக்காவின் நல்லுறுவு மேலும் பலப்படும்.
தற்போதைய சீர்திருத்தத்தின் மூலம் இந்த அழகான நாட்டில் பல மாற்றங்கள் ஏற்படும் அச்சத்துடன் ஆட்சி நடத்தும் நாடுகளுக்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டும் என்று நான் பதவியேற்றபோது வாக்குறுதி அளித்தேன்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றவும், நட்புக்கரம் நீட்டவும் உங்களிடம் நான் இப்போது வந்துள்ளேன் என்று தெரிவித்தார். அந்த வீட்டில் தான் இதற்கு முன்னர் ஆங் சான் சூகி சிறை வைக்கப்பட்டிருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment