Tuesday, November 6, 2012

சாதனை வசூலில் ஜேம்ஸ் பாண்டின் புதிய படம்

டேனியல் கிரேக் பாண்ட் வேடம் ஏற்றிருக்கும் Sky fall ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 24வது படமாகும்.நவம்பர் 1ம் திகதி வெளியான Sky fall, முதல் வாரத்திலேயே 37.2 மில்லியன் பவுண்டுகளை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது இங்கிலாந்து பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றிலேயே பெரிய சாதனையாம்.

இதற்கு முன்பு இங்கிலாந்து பாக்ஸ் ஆபீஸில் முதல் வார வசூல் சாதனையை வைத்திருந்த படம் ஹாரி பாட்டர் படம்தான். அந்த சாதனை அளவு 35.7 மில்லியன் பவுண்டுகளாகும்.

இத்தனைக்கும் ஹாரி பாட்டர் படங்கள் 3டியில் வெளியாகி வசூலைக் குவித்தன.

ஆனால் Sky fall 3டி படம் இல்லை. அப்படியிருந்தும் பெரிய வசூலைக் குவித்ததால் அதுவும் ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறதாம்.

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வார இறுதியில் பெரிய வசூலை அள்ளிய படம் என்ற சாதனையையும் Sky fall படைத்துள்ளதாம்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com