நான் மதம் பார்ப்பதில்லை... மனிதம் பார்ப்பவன்- பத்மஸ்ரீ கமல்ஹாசன்
நான் மத பண்டிகைகளைக் கூட கொண்டாடாதவன். மனிதர்களை கொண்டாடுபவன். நான் மதம் பார்ப்பதில்லை... மனிதம் பார்ப்பவன். நெற்றில் குறியீடு யாராவது இட்டு வந்தால் கூட இவர் இவராக்கும், அவர் இவராக்கும்... என பேதம் பார்த்து அறியாதவன்! அப்படி இருக்கையில் நான் இப்படி படம் எடுப்பேனா? இது தீவிரவாதத்திற்கு எதிரானபடம் அவ்வளவே! என தமிழ் சினிமாவிற்கு புதிய நவீன தொழில்நுட்பத்தில் தற்போது உருவாகியுள்ள ஆரோ 3டி விஸ்வரூபம் டிரையிலரையும் வெளியிட்டுபத்திரிகை, மீடியாக்கள் முன்னிலையில் பேசுகையில் தெரிவித்தார்.
அந் நிகழ்வில் நடைபெற்ற சம்பாசனை உங்களுக்காக , பத்மஸ்ரீ கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் படத்தின் ஆரோ 3டி டிரையிலர் அறிமுக விழா கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம்திகதியான நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது! இவ்விழாவில் 5.1 ஸ்டிரியோ சவுண்ட் சிஸ்டத்தில் வெளிவந்த விஸ்வரூபம் படத்தின் முந்தைய டிரையிலரையும், அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு புதிய நவீன தொழில்நுட்பத்தில் தற்போது உருவாகியுள்ள ஆரோ 3டி விஸ்வரூபம் டிரையில ரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அங்கு பேசிய கமல், இன்று எனது பிறந்தநாளில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் தனி ஹெலிகாப்டர் விமானம் மூலம் விஸ்வரூபம் படக்குழுவினருடன் சென்று அப்படத்தின் ஆடியோவை வெளியிடும் திட்டத்தில் இருந்தேன். ஆனால் வானிலை சரியில்லை... அவ்வாறு தற்போது செல்வது ரிஸ்க் என பல தரப்பினராலும் அறிவுறுத்தப்பட்டதால் அத்திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு இங்கு சென்னையில் விஸ்வரூபம் படத்தின் பிரமாண்டம் என ஆரோ 3டி சவுண்ட் எபெக்ட் டிரையிலரை ரிலீஸ் செய்திருக்கிறேன்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் படத்தை உருவாக்கி வருவதால் பட ரிலீஸ் தேதியும் இன்னும் முழுதாக முடிவு செய்யப்படவில்லை என்றார். பின்னர் அவரிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர் அதற்கு கமல் பொறுமையாக பதில் அளித்து பேசிய குறிப்பிடத்தக்கது. அதன் சுவாரஸ்யமான விபரம் வருமாறு... * கமல் ஹாலிவுட் செல்லும் திட்டம் என்னாயிற்று...? எனது கதைகளை பார்த்து வியந்து ஹாலிவுட் இயக்குநர் நண்பர் ஒருவர் என்னிடம் கதை கேட்டார். நானும் தயார் செய்துவிட்டேன். ஆனால் விஸ்வரூபம் பட வேலைகளால் அதை சரிபார்த்து அவரிடம் சமர்பிக்க முடியவில்லை. கூடிய விரைவில் அதுவும் நடக்கும்! * விஸ்வரூபமே ஹாலிவுட் தரத்தில் உள்ளதே? இதையும் ஆங்கில படமாகவும் ரிலீஸ் செய்யலாமே? அந்த முயற்சியும் நடக்கிறது. அதுவும் இப்பட தாமதத்திற்கு ஒரு காரணம். * விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதம் பற்றி கூறப்பட்டுள்ளது. டைட்டிலில் கூட குரானில் உள்ளது மாதிரி வலப்பக்கமிருந்து இடப்பக்கம் செல்கிறது.
இப்படம் தீவிரவாதத்திற்கு எதிரான படமா? நான் அப்படி படம் எடுப்பேனா...? நான் மத பண்டிகைகளைக் கூட கொண்டாடாதவன். மனிதர்களை கொண்டாடுபவன். நான் மதம் பார்ப்பதில்லை... மனிதம் பார்ப்பவன். நெற்றில் குறியீடு யாராவது இட்டு வந்தால் கூட இவர் இவராக்கும், அவர் இவராக்கும்... என பேதம் பார்த்து அறியாதவன்! அப்படி இருக்கையில் நான் இப்படி படம் எடுப்பேனா? இது தீவிரவாதத்திற்கு எதிரானபடம் அவ்வளவே! * விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான சொல்யூஷன் சொல்லப்பட்டு இருக்கிறதா...? சொல்யூஷன் எதுவும் சொல்லவில்லை. சின்ன ஸ்டேட்மெண்ட் உண்டு! அதேநேரம் இது யாருக்கும் எதிரான போரும் இல்லை என்றார் கமல். பின்னர் அதே திரையரங்கில் தமிழகம் முழுவதிலிருந்து வந்திருந்த தனது ரசிகர்களுக்கும் விஸ்வரூபம் படத்தின் ஆரோ 3டி டிரையிலரை போட்டுகாட்டி இப்படம் பற்றி பேசினார்.
0 comments :
Post a Comment