எரிவாயுவின் விலையை அதிகரிக்கபடுமா?
எரிவாயுவின் (கேஸ்) விலையை அதிகரிப்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் லாப் கேஸ் கம்பனி அனுமதி கோரியுள்ளது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபையின்; தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
சர்வதேச சந்தையில் கேஸ் விலை தொடர்பில் அண்மைக்காலமாக நிலவிய ஏற்றத்தாழ்வுகள் குறித்து அவதானித்து வருகின்றோம்.
எனவே இந்நிறுவனத்தின் கோரிக்கை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை கவனம் செலுத்துகின்றது.
எவ்வாறாயினும், கேஸ் விலையை அதிகரிப்பதற்கான அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் அதிகாரசபை இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment