பொது மக்களின் காணிகளை அடாத்தாக கைப்பற்றும் கனடாவிலிருந்து வந்த ஆசாமி
முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனைப் பகுதியில் உள்ள பண்டாரவன்னியன் சனசமூகத்திற்குச் சொந்தமான நான்கு பரப்புக் காணி கனடாவில் இருந்து வந்த ஒருவரால் அடாத்தாக கைப்பற்றப்பட்டுள்ளது.கனடா நட்டில் இருந்த அண்மையில் இங்கு வந்த நபர் ஒருவர் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் வசித்து வருகின்ற இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்பலவன் பொக்கனைப் பகுதியில் யுத்தத்தம் காரணமாக உடைந்து காணப்படும் பண்டாரவன்னியன் சனசமூக நிலையக் காணி தன்னுடையது என்று கூறி அக்காணியைச் சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.
இவ்வாறு பாதுகாப்பு வேலியை அமைக்கும் போது அம்பலவன் பொக்கணை கனிஸ்ர உயர்தர வித்தியாலையத்தின் பாதுகாப்பு வேலியினையும் பிடிங்கி எறிந்துள்ளார்.
பாடசாலைக்குச் சொந்தமான காணியையும் பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தின் அனுமதி இன்றி அடாத்தாக பிடித்துள்ளார்.
இவ்வாறு நாளுக்கு நாள் குறித்த சனசமூக நிலையத்திற்கு அருகில் உள்ள காணிகளையம் அடாத்தாக பிடிக்கும் நடவடிக்கையில் குறித்த நபர் ஈடுபட்டு வருகின்றார்.
0 comments :
Post a Comment