கிழக்கில் த.தே.கூ எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபைக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். சபையின் புதிய தவிசாளரின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவி தவிசாளர் மற்றும் அவரின் ஆதரவாளர்களுமே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டு பிரதேச சபையை கைப்பற்றி, தவிசாளராக கலையரசன் தலைமையில் ஆட்சியமைத்தது.
இந்நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கலையரசன் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இப்பிரதேச சபையின் தவிசாளர் வெற்றிடத்திற்கு த. தே. கூட்டமைப்பு, பிரதேச சபை உறுப்பினரான சிவலிங்கம் குணரட்ணத்தின் பெயரை உள்ளுராட்சி ஆணையாளருக்கு சிபார்சு செய்தது இதனைத் தொடர்ந்நது இவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஓழிக போன்ற சுலோகங்களும் கோஷங்களும் எழுப்பியவாறு 50 பேர் வரையிலானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள ஏனைய பிரதேச சபைகளில் அண்மைக்காலமாக இவ்வாறு மக்கள் போராட்டங்களை மேற்கொள்ள முயன்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment