Wednesday, November 7, 2012

நிலம் புயலை பயன்படுத்திக் கொண்ட மணிரத்னம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இதுதான் போல, கடல் படத்தை இயக்கி வரும் மணிரத்னம், நிலம் புயலை பயன்படுத்தி சில முக்கிய காட்சிகளை எடுத்துள்ளார்.கடந்த புதனன்று வங்கக் கடலில் உருவான நிலம் புயல் காரணமாக, தமிழகத்தின் கடற் கரையோரப் பகுதிகளே அல்லோலகல்லோலப் பட்டது.

ஆனால், புயல் வந்ததை நினைத்து மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் கடற்கரையில் காத்திருந்த ஒரு குழு உள்ளது. அதுதான் மணிரத்னத்தின் கடல் படப்பிடிப்புக் குழு. புதனன்று காலையில் இருந்தே சென்னையை அடுத்த காசிமேடு, ராயபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர், நிலம் புயல் தாக்கத்தை பின்னணியாகக் கொண்டு சில முக்கியக் காட்சிகளை படம்பிடித்துள்ளது.

இது குறித்து கடல் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி தனது இணையப் பக்கத்தில், புயல் சீற்றத்துக்கு இடையே சில காட்சிகளை படம்பிடித்தோம். அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com