ஓபாமாவின் மகள்களுடன் டேட்டிங் போக விருப்பமா? தொடர்ந்து வாசியுங்கள்
இரண்டாவது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட பராக் ஒபாமா மகள்களுடன் டேட்டிங் போக விரும்பும் இளைஞர்கள் வெள்ளை மாளிகையின் காவலைத் தாண்டி வந்தால் அது தொடர்பில் செவிமடுக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.வானொலி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனது மகள்கள் மலியா (வயது 14), சாஷா (வயது 11) இருவருமே வேகமாக வளர்ந்து விட்டனர்.
நம்பிக்கை அதிகம் கொண்ட பெண்களாக இவர்கள் உருமாறி வருகிறார்கள். பருவ வயதைத் அடைந்துள்ள இவர்களைக் கவனிப்பதிலும் நான் கவனம் வைத்தாக வேண்டும். நிச்சயம் இளைஞர்கள் எனது மகள்களுடன் டேட்டிங் போக விரும்புவார்கள். ஆனால் வெள்ளை மாளிகையின் பலத்த பாதுகாவல் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
எனது மகள்களுடன் டேட்டிங் போக யாரேனும் விரும்பினால் இந்த காவலைத் தாண்டித்தான் வர வேண்டும்.ஒரு வேளை யாரேனும் இதையும் தாண்டி தைரியமாக வந்து விட்டால் நிச்சயம் அவர்கள் சொல்வதை காது கொடுத்து பொறுமையாக கேட்பேன் என்றார்.
எப்போதுமே தன் மகள்களுடன் நேரத்தை செலவிட முடியாத சூழ்நிலையில் தாம் இருந்தாலும் மனைவி மிஷல் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி கடைகளுக்கு அழைத்துச் செல்கிறார், சினிமா பார்க்கிறார்கள், பள்ளிக்கும் போகிறார்கள் என்கிறார் ஒபாமா.
0 comments :
Post a Comment