Thursday, November 1, 2012

பொடுகு பிரச்சனைக்கு எளிய தீர்வுகள்

தலையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகு. அத்தகைய பொடுகு ஸ்கால்ப்பில் அளவுக்கு அதிகமாக இறந்த செல்கள் இருப்பதால் ஏற்படுகிறது. அவ்வாறு பொடுகு தலையில் அளவுக்கு அதிகமாக வந்துவிட்டால், கூந்தல் உதிர்தல், பிம்பிள், முகப்பரு மற்றும் நரை முடி போன்றவை ஏற்படும். ஆகவே இத்தகைய பொடுகு பிரச்சனையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தீர்க்கலாம்.

• 1 கப் தயிருடன் 2 டீஸ்பூன் வால் மிளகுத்தூளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை தலையில் நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு படிப்படியாக நீங்கிவிடும்.

• ஆலிவ் ஆயிலில் பொடுகை நீக்கும் தன்மை உள்ளது. அதற்கு இரவில் படுக்கும் முன்பு, அந்த ஆயிலை லேசாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, பின் தூங்க வேண்டும். பின் அதனை காலையில் எழுந்து, ஷாம்பை போட்டு குளிக்க வேண்டும்.

• பொடுகு பிரச்சனைக்கு பூண்டு, எலுமிச்சை சிறந்த பலனைத் தரும். எலுமிச்சை ஸ்கால்ப்பில் உள்ள தோல் செதில் செதிலாக வருவதை தடுக்கும். பூண்டு ஒரு ஆன்டி-பயாடிக் மற்றும் ஸ்கால்ப்பில் பாக்டீரியா வராமல் தடுக்கும்.

ஆகவே அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்த பின் ஷாம்பு சேர்த்து குளிக்க வேண்டும்.

• வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்காப்பில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் உள்ள பொடுகு முற்றிலும் போய்விடும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com