ஒண்லைன் வலைத்தளங்களில் தலைகாட்டும் சோனி எக்ஸ்பீரியா ஜே ஸ்மாட் போன்
சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் ஆன்லைன் வலைத்தளங்களில் தலைகாட்டுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரதச்தினை பார்க்கும் முன்பு, இதன் தொழில் நுட்ப வசதிகளை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
சிறப்பான தொழில் நுட்ப வசதிகளை வழங்கி வரும் சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் மிக பிரசித்தி பெற்று வருகிறது. அந்த வகையில் எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போனும் வாடிக்கையாளர்கள் தேடிய பட்டியலில் சேரும்.
இந்த எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் நவீன வசதிகளை வழங்குவதோடு, ப்ரீ-ஆர்டரில் சில வலைத்தளங்களில் தலை காட்டுகிறது.
எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் ப்ளேக், கோல்டு, பிங்க் போன்ற கண்கவரும் நிறங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சிறப்பானதொரு 4 இஞ்ச் திரையினையும் கொடுக்கும். இதில் அதிகபட்சமாக 854 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.
ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உருக வைக்கும் இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் பிராசஸரை சிறப்பாக வழங்கும்.
இதில் 7 மணி நேரம் 18 நிமிடங்கள் டாக் டைம் வசதியினை சிறப்பாக பெற முடியும். இதில் 124 கிராம் எடையில் கைக்கு கச்சிதமாக இருக்கும் இந்த எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன்,
ஃபிலிப்கார்ட் வலைத்தளத்தில் ப்ரீ-ஆர்டர் மூலம் ரூ. 16,490 விலையில் பெறலாம்.
0 comments :
Post a Comment