வடகின் வீதி அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 98 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி.
வடபுல வீதி அபிவிருத்தி செயற்த்திட்டங்களுக்காக 98 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிக நிதியுதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 200 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 19 வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன. இது தொடர்பான உடன்படிக்கையினை கைச்சாத்திடும் நிகழ்வு நிதி மற்றும் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சில் இடம்பெறளுறள்ளது.
அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநித ரீட்டா சுலிவன் ஆகியோர் இவ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் பல நிறுவனங்களுடன் இணைந்து இச்செயற்த்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன..
0 comments :
Post a Comment