சிபிஎஸ்இ-9ம் வகுப்புப் பாடத்தில் நாடார்கள் பற்றிய தவறான கருத்து : நீக்கக்கோரி பிரதமருக்கு கடிதம்
நாடார்கள் குறித்து அவதூறாக சிபிஎஸ்இ-9ம் வகுப்புப் பாடத்தில் கூறப்பட்டுள்ளதை உடனே நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில்இ தமிழகத்தின் ஒரு பிரிவினரான நாடார்களை இழிவு படுத்தும் விதத்தில் பாடம் இடம்பெற்றிருப்பதை உங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். இந்தப் பாடத்தில் சாதிய ரீதியில் இவை அணுகப் பட்டிருக்கின்றன. சாதிப் பிரச்னையும் உடுப்பு மாற்றமும் என்ற பாடத்தில் தென்னகத்தில் நடத்திய தோள் சீலைப் போராட்டம் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுத் தொடர்புடைய ஒரு பகுதி மக்களை இவ்வாறு சித்திரிப்பது நவீன சமுதாயத்துக்கு உகந்ததல்ல. எனவே இந்தப் பாடத்தை புத்தகத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் முதல்வர் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியும் நாடார் சமூகத்தினர் பற்றி தவறான - திரித்துக் கூறப்பட்ட குறிப்புகளை நீக்கக் கோரி கடிதம் ஒன்றினை பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.
0 comments :
Post a Comment