முகமது நபிக்கு எதிரான திரைப்படம் : 8 பேருக்கு எகிப்தில் மரணதண்டணை!!
சமீபத்தில் இணையத்தில் வெளியாகி மிகுந்த பரபரப்பையும் வன்முறையையும் தூண்டியதுடன் சில உயிர்களையும் பலி கொண்டிருந்த படமான 'இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' எனும் திரைப்படத்தை இயக்கியவருக்கும் அதனை இணையத்தில் பரவச் செய்த 7 பேர் உட்பட மொத்தம் 8 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் ஒன்று புதன்கிழமை மரண தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப் பட்ட குறும்படமான 'இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்' செப்டெம்பரில் இணையம் முழுதும் பரவி முஸ்லிம் சமூகத்திடையே பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்ததற்குக் காரணம் இப்படத்தில் இறைதூதரான முஹம்மது ஒரு மோசமானவர் எனவும் விதூஷகன் எனவும் சித்தரிக்கப்பட்டிருந்தமை தான்.
இந்நிலையில் இக்குறும்படத்தைத் தயாரித்த எகிப்து-அமெரிக்கரான நகோலா ஐ லாஸ் ஏஞ்செல்ஸில் போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்கியிருந்தனர். ஆனால் அவருக்கு வெறுமனே ஓராண்டு சிறைத் தண்டனையே விதிக்கப்பட்டது.
எனினும் இவர் மீதும் இத்திரைப்பட இயக்குனர் மற்றும் இணையத்தளத்தில் பரவச் செய்தவர்கள் என மொத்தம் 8 பேருக்கு எகிப்திலுள்ள நீதிமன்றம் ஒன்றிலும் வழக்குத் தொடுக்கப்பட்டு அனைவருக்கும் மரண தண்டனை என்ற அதிகபட்சத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இணையத்தளத்தில் இதைப் பரப்பியவர்கள் தலை மறைவாகியுள்ளனர்.
இவர்கள் அரபு நாடுகளுக்கோ எகிப்துக்கோ தவறுதலாக சென்றால் கூட இவர்களுக்கான மரணதண்டனை நிறைவேற்றப்படும் வாய்ப்புள்ளது.
0 comments :
Post a Comment