Tuesday, November 13, 2012

நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் !

41 மெகா பிக்ஸல் கேமராவில் ஸ்மார்ட்போன் உலகில் கலக்கிய நோக்கியா-808 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன் பற்றிய ஒரு சிறப்பு செய்தி வாடிக்கையாளர்களுக்கு இங்கே கத்திருக்கிறது.
நோக்கி-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனை வாங்க ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இன்னும் காத்திருக்கின்றனர். இப்போது இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் வலைத்தளங்களில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் நோக்கியா வாடிக்கையாளர்களுக்கும், கேமரா பிரியர்களுக்கும் இது சந்தோஷமான விஷயம் தான்.

சஹோலிக் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கும் முன்பு இந்த ஸ்மார்ட்போன் ரூ. 32,000 விலை கொண்டதாக இருந்தது. அதன் பின்னர் ரீட்டெயில் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 27,000 விலை கொண்டதாக இருந்தது. ஆனால் இப்போது இன்னும் விலைகுறைவாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட 7 ஆயிரத்திற்கு தொகையில் வித்தியாசப்படுகிறது.

நோக்கியா-808 பியூர்வியூ சிம்பையான் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்குவதோடு, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் வசதியினையும் கொண்டதாக இருக்கும். இதில் 41 மெகா பிக்ஸல் கேமராவினை எளிதாக பெறலாம். இதில் 7728 X 5354 பிக்ஸல் கேமரா துல்லியத்தினை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 4X டிஜிட்டல் சூம் வசதியினை பயன்படுத்தி பலன் பெறலாம். இதன் 1,400 எம்ஏஎச் பேட்டரி 11 மணி நேரம் பேக்கப் டைமினை வழங்கும். மேலும் இதில் எட்ஜ் மற்றும் 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்ப வசதியினை பெறலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com