மதுரை வரை தன் சேவையை விஸ்தரிக்கின்றது மிகின் லங்கா!
மிகின்லங்கா விமான சேவை எதிர்வரும் 7 ஆம் திகதி தனது சேவையை மதுரைக்கு விஸ்தரிக்கவுள்ளது. கொழும்பிலிருந்து தமிழகத்தின் மதுரை மாவட்டத்திற்கு நேரடி சேவை இதன் மூலம் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கு முன்னர் மதுரைக்கு பயணம் செய்தோர் திருவனந்தபுரம் அல்லது திருச்சி ஊடாகவே மதுரைக்கு செல்லவேண்டியிருந்தது. இதனால் பயணிகள் பெரும் சிரமங்களையும் செலவுகளையும் எதிர்கொண்டனர்.
மிகின் லங்காவின் புதிய சேவை மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவுள்ளதாக நிறுவனத்தின் அரச மற்றும் பொது விவகாரங்களுக்கான முகாமையாளர் காமினி அபேவர்தன தெரிவித்தார்.
இதற்கு புறம்பாக வார நாட்களில் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மத்திய கிழக்கு தூர கிழக்கு நாடுகளிலிருந்து மதுரை வரைக்கும் மதுரையிலிருந்து மத்தியகிழக்கு மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கும் மிகின் லங்கா தனது சேவைளை நடத்தவுள்ளது.
0 comments :
Post a Comment