7-வது முறையாக விண்வெளி பயணம் :சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தனது சக விண்வெளி வீரருடன் 7-வது முறையாக விண்வெளி பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். ரேடியேட்டர் அமைப்பில் உள்ள அம்மோனியா கசிவைக் கண்டறிவதற்காக அவர் இப்போது இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். விமான பொறியாளரான அகி ஹோஷிட் என்பவருடன் சுனிதா இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அம்மோனியா கசிவு தொடர்ந்தால் அதனைக் கண்டறிவதற்காக நாங்கள் அடுத்த சில மாதங்கள் இதனை ஆய்வோம் என அந்த விண்வெளி ஓடத்தின் கட்டுப்பாட்டாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 6 முறை விண்வெளி பயணம் மேற்கொண்ட சுனிதா, 44 மணிநேரம் விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளார்.
0 comments :
Post a Comment