இலங்கை அரசாங்கத்தின் 66வது வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
இலங்கையின் எட்டாவதுமான வரவு - செலவு திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.பாராளுமன்றம் இன்று பிற்பகல் 12.50க்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. அதனைத் தொடர்ந்து சுபவேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு - செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றினார்.
நாட்டின் பரந்தளவிலான பொருளாதார அபிவிருத்தியை மையமாகக் கொண்டு இந்த வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள், வர்த்தக சமூகங்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள், போன்ற அனைவரினதும் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு -செலவு திட்டம் தொடர்பான விவாதம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறும். இது இலங்கையின் 66ஆவதும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 8வது வரவு செலவுத்திட்டமாகும்.
1948ஆம் ஆண்டுக்கான முதலாவது வரவு செலவு திட்டத்தை 1947ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி அன்றைய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவிருந்த ஜே.ஆர். ஜயவர்த்தன சபையில் சமர்ப்பித்தார்.
2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது வரவு - செலவு திட்டத்தை 2005ஆம் ஆண்டே சமர்ப்பித்தார். அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் என்ற வகையில் தனது எட்டாவது வரவு - செலவு திட்டத்தை இன்று சமர்ப்பித்தார்.
0 comments :
Post a Comment