ஹத்ஃப் 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது பாகிஸ்தான் .
அணு ஆயுதங்களை சுமந்து 1300 கி.மீ தூரம் வரை சென்று தாக்க கூடிய அதிநவீன ஹத்ஃப்-5 ஏவுகணைகளை பாகிஸ்தான் அரசு வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் தாவும் பலம் கொண்ட ஏவுகணைகளை இதன்மூலம் பாகிஸ்தான் தனக்குரியதாக்கியுளது. திரவ எரிபொருள் மூலம் இயங்க கூடிய இந்த ஏவுகணை, சாதாரண மற்றும் சக்திவாய்ந்த அணு குண்டுகளை தாங்கிச்சென்று குறித்த இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பை இச்சோதனை வலுப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்கனவே 60 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்த ஹத்ஃப்-9 முதல் ஹத்ஃப்-4 வரை பல்வேறு அதிநவீன ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்திருந்தது.
இதேவேளை தற்போதைய ஏவுகணை சோதனையை எங்குவைத்து நடத்தியது எனும் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
0 comments :
Post a Comment