ஐபோன்-5 வெளியிடப்பட்ட சில தினங்களிலேயே 15 ஆயிரம் போன்கள் விற்பனை
ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்ட சில தினங்களிலேயே 15 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகிவிட்டதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.நமது நாட்டில் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும் என்று வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. ஸ்மார்ட்போன் மார்கெட்டை வந்தடைந்த சில தினங்களிலேயே 15 ஆயிரம் யூனிகள் விற்பனையாகி உள்ளது என்பது ஆச்சர்யமூட்டும் ஒரு செய்தி தான்.
ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனிற்கும் அடுத்து இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன் எந்த அளவு வரவேற்பினை பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இப்போது இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினை பெற்று வருகிறது.
முன்பெல்லாம் இது போன்ற விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் நமது நாட்டில் அதிக விற்பனையை பெறுவது என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இப்போதைய தலைமுறை சற்று மாறியிருக்கிறது.
உயர்ந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் ஸ்மார்ட்போனாக இருந்தால் போதும், விலை பற்றி கவலைப்படாமல் வாடிக்கையாளர்கள் அந்த
ஸ்மார்ட்போனை உடனே வாங்கிவிடுகின்றனர். இந்த மாற்றம் நமது நாட்டில் தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருவதை தெளிவாக காட்டுகிறது என்று சொல்லலாம்.
இந்த விற்பனை குறைவு தான். இருப்பினும் வெளியிடப்பட்ட சில தினங்களில் இந்த ஸ்மார்ட்போன் 15 ஆயிரம் யூனிட் விற்பனையை பெற்றிருக்கிறது என்றால், இன்னும் கொஞ்சம் காத்திருந்தால் இதன் விற்பனை நிச்சயம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
0 comments :
Post a Comment