இலங்கையில் விபசாரத்தில் ஈடுபடும் சிறுவர்கள் 40 ஆயிரம் பேர் உள்ளனர்-றோஸி சேனாநாயக்க
விபசாரத்தில் ஈடுபடும் 40,000 சிறுவர்கள் இலங்கையில் இருப்பதாக யுனிசெப், புலம்பெயர்வோருக்கான சர்வதேச நிறுவனம் என்பவை தயாரித்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் றோஸி சேனாநாயக்க, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் நிலைமை விசனத்துக்குரியதாகும். இவ்வருடத்தில் முதல் ஒன்பது மாதத்தில் சிறுவர்களுக்கு எதிராக 4,414 குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன.
பராயம் குறைந்த கர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இவைபற்றி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment