சாம்சங் அறிமுகம் செய்யும் சாம்சங் கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன்
கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போனை தென் கொரிய நிறுவனமான சாம்சங் அறிமுகம் செய்ய இருக்கிறது.
கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனிற்கு பிறகு, கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் நமது நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனால் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு பலரின் மனதிலும் இருந்து
வந்தது.
ஆனால் இது பற்றி சாம்சங் நிறுவனம் தகவல்கள் ஏதும் வெளியிடாமல் இருந்து வந்தது. 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பது போன்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.
இதில் குவாட் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் எக்ஸினோஸ்-5450 மற்றும் 3 ஜிபி ரேம் வசதியினையும் வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் 5 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அமோலெட் திரை தொழில் நுட்பத்தினை இந்த ஸ்மார்ட்போன் வழங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் என்று கருதப்படும் கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 32 ஜிபி வெர்ஷன் ஸ்மார்ட்போன் 128 ஜிபி வெர்ஷனை வழங்கும் என்றும் தகவல்கள் சில கூறப்படுகின்றன.
இதில் 3,200 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஸ்கைப் 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா ஆகிய வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சர்வதேச மொபைல் கண்காட்சிக்கும் முன்பே இந்த கேலக்ஸி எஸ்-4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
0 comments :
Post a Comment