பெப்ஸி ஐ.பி.எல்: ரூ.397 கோடி கொடுத்து ஸ்பான்சர்!
அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் பெப்சி ஐ.பி.எல். என்ற பெயரில் நடைபெறும். இதற்கான ஒப்பந்தத்தை ரூ.396.8 கோடி ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்டு வென்றது குளிர்பான பெப்சி நிறுவனம்.ஏர்செல் நிறுவனம் ரூ.316 கோடிக்கு கேட்டிருந்தது. ஆனால் பெப்சி 396.8 கோடிக்கு கேட்டு ஏர்செல்லை பின்னுக்குத் தள்ளியது.
இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கானது, அதாவது 2017ஆம் ஆண்டு வரை பெப்சி ஐ.பி.எல் என்றே இனி குறிப்பிடப்படும்.
2008- 12 காலக்கட்ட ஐ.பி.எல். தொடர்களுக்கான தலைமை ஸ்பான்சரை எடுத்த டி.எல்.எஃப் நிறுவனம் அப்போது கொடுத்த தொகை ரூ.200 கோடியே!!
உலகின் எந்த வித விளையாட்டு விற்பனை பிராண்டுகளை விடவும் ஐ.பி.எல். ஒரு சிறந்த பிராண்ட் என்று பெப்சி நிறுவன தலைமை இயக்குனர் தீபிகா வாரியர் குதூகலித்துள்ளார்.
0 comments :
Post a Comment