மும்பை-ஏ அணியுடன் பயிற்சி ஆட்டம் : முதல் நாளில் இங்கிலாந்து 338 ரன் - பேர்ஸ்டோ சதம்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது. இப்போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 2-வது பயிற்சி ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் மும்பை ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. முன்னணி வீரர்கள் நிக் காம்டன் (4), இயன் பெல்(4) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். ரூட் மற்றும் டிராட் ஆகியோர் தலா 28 ரன்கள் சேர்த்தனர்.
அதன்பின்னர் சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ 118 ரன்களும், மார்கன் 76 ரன்களும் விளாசினர். சமித் பட்டேல் (59), கேப்டன் பிராட் (6) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
மும்பை அணி தரப்பில் வெயிங்காங்கர், ஜாவீத்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தாக்கூர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். நாளை 2-ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
0 comments :
Post a Comment